நல்ல பதிவு, நன்றி பத்ரி

விளையாட்டாக ஆரம்பித்ததுதான். இத்தனை தீவிரமாக வலையுலகம் இதனைப் பரப்பும் என்று நினைக்கவில்லை. விபரீதம் ஏதும் விளையாதிருப்பதற்காக இந்தக் குறிப்பை இங்கே எழுதிவைக்கிறேன். சில காலம் முன்னர் பத்ரி தன் வலைப்பதிவில் மிகவும் உக்கிரமாக அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த நீள நீளமான கட்டுரைகளை எதற்கோ நேர்ந்துகொண்டாற்போல தினமொன்றாக எழுதித் தள்ளிக்கொண்டே இருந்தார். சற்றும் தொடர்பில்லாமல் இடையிடையே உலக அரசியல், காந்தியம், கம்யூனிசம், தமிழ் ஈழம் என்று உலகிலுள்ள சகலத்தையும் ஒரு கை பார்த்துவிடுகிற உத்தேசத்துடன் அவரது கட்டுரைகள் எப்போதும்போல் … Continue reading நல்ல பதிவு, நன்றி பத்ரி